திருக்குறள்

893.

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.

திருக்குறள் 893

கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு.

பொருள்:

ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

மு.வரததாசனார் உரை:

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.